Song 254
கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்தனத்தனத் தனத்தனத்தனதான
Lyrics
கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்கடைக்கணிற் கொடுத்தழைத்தியல்காமக்
கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்கரைத்துடுத் தபட்டவிழ்த்தணைமீதே
சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத்தமிட்டிருட் குழற்பிணித்துகிரேகை
சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்தலத்தில்வைப் பவர்க்கிதப்படுவேனோ
இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்தெழிற்றினைக் கிரிப்புறத்துறைவேலா
இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்சிறைச்சியைப் பசித்திரைக்கிசைகூவும்
பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்பிதற்றறப் படுத்துசற்குருவாய்முன்
பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்பெருக்குமெய்த் திருத்தணிப்பெருமாளே.
