Song 241
அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
- Sthalam
- திருத்தணிகை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்தனத்தனத் தனத்தனத்தனதான
Lyrics
அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்தழித்தறக் கறுத்தகட்பயிலாலே
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்கடுத்தபத் தமுற்றுவித்தகர்போலத்
தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்தலத்துமற் றிலைப்பிறர்க்கெனஞானம்
சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்சறுக்குமிப் பிறப்புபெற்றிடலாமோ
பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்பொருப்பினிற் பெருக்கவுற்றிடுமாயம்
புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்புரிக்கிரக் கம்வைத்தபொற்கதிர்வேலா
திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்தினைப்புனக் கிரித்தலத்திடைதோயுஞ்
சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்சிறப்புடைத் திருத்தணிப்பெருமாளே.
