Song 240
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
- Sthalam
- திருத்தணிகை
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தனதன தனதனதனதன தனதனதனதான
Lyrics
அரகர சிவனரி அயனிவர் பரவிமுனறுமுக சரவணபவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்அநலென எழவிடுமதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்உளமதி லுறவருள்முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுகபரமன திருசெவிகளிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதைஉரைதரு குருபரவுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவரவர்களு முறுவரமுநிவோரும்
பரவிமு னநுதின மானமகிழ் வுறவணிபணிதிகழ் தணிகையிலுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையுமிருபுடை யுறவருபெருமாளே.
