Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 239

அமைவுற் றடையப் பசியுற் றவருக்

Thalam
ஆதி - திஸ்ர நடை (12)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத்தனதான

Lyrics

அமைவுற் றடையப் பசியுற் றவருக்கமுதைப் பகிர்தற்கிசையாதே

அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்தருள்தப் பிமதத்தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்சமனெட் டுயிரைக்கொடுபோகுஞ்

சரிரத் தினைநிற் குமெனக் கருதித்தளர்வுற் றொழியக்கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்தவருக் கிசையப்புகல்வோனே

இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்கிரையிட் டிடுவிக்ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்தவமுற் றவருட்புகநாடும்

சடுபத் மமுகக் குகபுக் ககனத்தணியிற் குமரப்பெருமாளே.

All songs →