Song 242
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- வஸந்தா
- Thalam
- ஆதி - கண்ட நடை (20)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - அதீதம்)தனத்தன தனத்தன தனத்தன தனத்தனதனத்தன தனத்தனதனதான
Lyrics
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்இடுக்கினை யறுத்திடுமெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புடனிலக்கண இலக்கியகவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சகதலத்தினில் நவிற்றுதலறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடுசமர்த்திகள் மயக்கினில்விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்களிப்புட னொளித்தெய்தமதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படுகனற்கணி லெரித்தவர்கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொருபுறத்தினை யளித்தவர்தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணிபொருப்பினில் விருப்புறுபெருமாளே.
