Song 236
விடமும்வடி வேலு மதனச ரங்களும்
- Sthalam
- சுவாமி மலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தான தனதன தந்தனதனதனன தான தனதன தந்தனதனதனன தான தனதன தந்தனதனதான
Lyrics
விடமும்வடி வேலு மதனச ரங்களும்வடுவுநிக ரான மகரநெ டுங்குழைவிரவியுடன் மீளும் விழிகளு மென்புழுகதுதோயும்
ம்ருகமதப டீர பரிமள குங்குமமணியுமிள நீரும் வடகுல குன்றமும்வெருவுவன பார புளகத னங்களும்வெகுகாம
நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிடமலர்சொருகு கேச பரமுமி லங்கியநளினமலர் சோதி மதிமுக விம்பமும்அனநேராம்
நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனுமுழுதுமபி ராம அரிவய கிண்கிணெனகையுமுள மாதர் கலவியி னைந்துருகிடலாமோ
வடிவுடைய மானு மிகல்கர னுந்திகழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கடலவையேழும்
மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்வகையிரவி போலு மணியும லங்க்ருதமணிமவுலி யான வொருபதும் விஞ்சிருபதுதோளும்
அடைவலமு மாள விடுசர அம்புடைதசரதகு மார ரகுகுல புங்கவன்அருள்புனைமு ராரி மருகவி ளங்கியமயிலேறி
அடையலர்கள் மாள வொருநிமி டந்தனிலுலகைவல மாக நொடியினில் வந்துயர்அழகியசு வாமி மலையில மர்ந்தருள்பெருமாளே.
