Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 235

வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்ததானன தனத்தத் தாத்ததனதான

Lyrics

வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்துவாவென நகைத்துத் தோட்டுகுழையாட

வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டிவாசனை முலைக்கச் சாட்டியழகாகச்

சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டிதீதெய நடித்துப் பாட்டுகுயில்போலச்

சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டிசீர்பொருள் பறிப்பொய்க் கூத்தருறவாமோ

சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கிசூர்கிரி கொளுத்திக் கூற்றுரிடும்வேலா

தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்ததோலுடை யெனப்பர்க் கேற்றிதிரிவோனே

ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்றுமேரெழி னிறத்துக் கூர்த்தமகவோனே

ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்றஏரக பொருப்பிற் பூத்தபெருமாளே.

All songs →