Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 234

வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தன ....ந.. தந்ததான

Lyrics

வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழைகாதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடுவாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துளதுண்டக்஡ணவ

வார்கமு கிற்புய நற்கழை பொற்குவடாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணைமார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திரரம்பைமாதர்

காருறும் வித்திடை யிற்கத லித்தொடைசேரல்குல் நற்பிர சத்தட முட்கொடுகால்மறை யத்துவ ளச்செறி பொற்கலையொண்குலாவக்

கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெருமீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர்சந்தமாமோ

சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துயராழியி ரைப்பநி ணக்குட லைக்கழுசூழந ரிக்கெரு டக்கொடி பற்பலசங்மாகச்

சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகையானையு ழற்றிந டுக்கிம தப்பொறிசோரந கைத்தயி லைக்கொடு விட்டருள்செங்கைவேலா

ஏரணி நற்குழ லைக்கக னச்சசிமோகினி யைப்புணர் சித்தொரு அற்புதவேடமு தச்சொரு பத்தகு றத்திமணங்கொள்வோனே

ஏரக வெற்பெனு மற்புத மிக்கசுவாமிம லைப்பதி நிற்குமி லக்ஷணராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள்தம்பிரானே.

All songs →