Song 233
வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி
- Sthalam
- சுவாமி மலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தத்த தந்த தான தத்த தந்ததான தத்த தந்ததனதான
Lyrics
வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பினீடு மெய்த்து யர்ந்துவயதாகி
வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கைமார்க ளுக்கி சைந்துபொருள்தேடி
ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்தமாப ணிக்கள் விந்தையதுவான
ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொடாவி மெத்த நொந்துதிரிவேனோ
சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்துசூழ்சு ரர்க்க ணன்புசெயும்வீரா
சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்தசூத னுக்கி சைந்தமருகோனே
ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்றுதானி றைக்க வந்ததொருசாலி
யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சுமேர கத்த மர்ந்தபெருமாளே.
