Song 232
வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
- Sthalam
- சுவாமி மலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தான தந்த தானதன தான தந்ததானதன தான தந்ததனதான
Lyrics
வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்துமாவலிவி யாதி குன்மமொடுகாசம்
வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்மாதர்தரு பூஷ ணங்களெனவாகும்
பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்துபாயலைவி டாது மங்கஇவையால்நின்
பாதமல ரான தின்க ணேயமற வேம றந்துபாவமது பான முண்டுவெறமுடி
ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்றுஈனமிகு சாதி யின்கணதிலேயான்
ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்ஈரஅருள் கூர வந்துஎனையாள்வாய்
சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றிசூழமதில் தாவி மஞ்சினளவாகத்
தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்தசுவாமிமலை வாழ வந்தபெருமாளே.
