Song 231
முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி
- Sthalam
- சுவாமி மலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தான தனன தந்த, தனன தான தனன தந்ததனன தான தனன தந்ததனதான
Lyrics
முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கிமுளரி வேரி முகைய டர்ந்தமுலைமீதே
முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்துமுகமொ ராறு மிகவி ரும்பிஅயராதே
அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தைஅடைய வாரி மிசைபொ ழிந்துனடிபேணி
அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பினடிமை யாகு முறைமை யொன்றைஅருள்வாயே
தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்துதமர வேலை சுவற வென்றவடிவேலா
தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டுதரணி யேழும் வலம்வ ருந்திண்மயில்வீரா
மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்துவலிய காவல் புனைய ணங்கின்மணவாளா
மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கிவளர்சு வாமி மலைய மர்ந்தபெருமாளே.
