Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 237

விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனதான

Lyrics

விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதனதனத்த னந்தன தனதன வெனவொலிவிரிப்ப வண்கயல் விழியுறை குழையொடுமலைபாய

மிகுந்த வண்சிலை நுதல்மிசை திலதமொடசைத்த பொன்குழை யழகெழ முகவொளிவெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர்வரிபோதத்

தரித்த தந்திரி மறிபுய மிசைபலபணிக்கி லங்கிய பரிமள குவடிணைதனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடைபடுசேலை

தரித்து சுந்தர மெனஅடர் பரிபுரபதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவதொழியாதோ

உரித்த வெங்கய மறியொடு புலிகலைதரித்த சங்கரர் மதிநதி சடையினர்ஒருத்தி பங்கின ரவர்பணி குருபரமுருகோனே

உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்குவட்டை யும்பொடி படசத முடிவுறவுழைத்த இந்தரர் பிரமனு மகிழ்வுறவிடும்வேலா

வரித்த ரந்துள வணிதிரு மருவியவுரத்த பங்கயர் மரகத மழகியவணத்த ரம்பர முறவிடு கணையினர்மருகோனே

வனத்தில் வந்தொரு பழையவ னெனவொருகுறத்தி மென்புன மருவிய கிளிதனைமயக்கி மந்திர குருமலை தனிலமர்பெருமாளே.

All songs →