Song 227
பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
- Sthalam
- சுவாமி மலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதான தத்ததன தனதான தத்ததனதனதான தத்ததனதனதான
Lyrics
பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொருபலனேபெ றப்பரவுகயவாலே
பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்பதறாமல் வெட்கமறுவகைகூறி
விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்வினையேமி குத்தவர்கள்தொழிலாலே
விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்விலைமாதர் பொய்க்கலவியினிதாமோ
மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்வடமேரெ னத்தரையில்விழவேதான்
வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறுமருகாக டப்பமலரணிமார்பா
சிலகாவி யத்ததுறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்செவியார வைத்தருளுமுருகோனே
சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்திருவேர கத்தில்வருபெருமாளே.
