Song 226
பரவரி தாகிய வரையென நீடிய
- Sthalam
- சுவாமி மலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தானன, தனதன தானனதனதன தானனதனதான
Lyrics
பரவரி தாகிய வரையென நீடியபணைமுலை மீதினிலுருவான
பணிகளு லாவிட இழையிடை சாய்தருபயிலிகள் வாள்விழிஅயிலாலே
நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்நிரைதரு மூரலினகைமீது
நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்நிலையெழ வேயலைவதுவாமோ
அரவணை யார்குழை பரசிவ ஆரணஅரனிட பாகமதுறைசோதி
அமையுமை டாகினி திரிபுரை நாரணிஅழகிய மாதருள்புதல்வோனே
குரவணி பூஷண சரவண தேசிககுககரு ணாநிதிஅமரேசா
குறமக ளானைமின் மருவிய பூரணகுருகிரி மேவியபெருமாளே.
