Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 228

பாதி மதிநதி போது மணிசடை

Thalam
மிஸ்ரசாபு (3 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகிட-1 1/2, தகதிமி 2தான தனதன தான தனதனதான தனதனதனதான

Lyrics

பாதி மதிநதி போது மணிசடைநாத ரருளியகுமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்பாதம் வருடியமணவாளா

காது மொருவிழி காக முறஅருள்மாய னரிதிருமருகோனே

கால னெனையணு காம லுனதிருகாலில் வழிபடஅருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருலகாளும் வகையுறுசிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்சூழ வரவருமிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசுவாமி மலைதனிலுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிடவேலை விடவலபெருமாளே.

All songs →