Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 199

விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தனன தந்த தனதனன தனன தந்ததனதனன தனன தந்ததனதான

Lyrics

விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்துவிழவதன மதிவி ளங்கஅதிமோக

விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்துவிரகமயல் புரியு மின்பமடவார்பால்

இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்தஇருளகல வுனது தண்டையணிபாதம்

எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பியினியபுகழ் தனைவி ளம்பஅருள்தாராய்

அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தைஅழகினொடு தழுவு கொண்டல்மருகோனே

அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்டஅமரர்சிறை விடுப்ர சண்டவடிவேலா

பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கைபடர்சடையர் விடைய ரன்பருளமேவும்

பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்தபழநிமலை தனில மர்ந்தபெருமாளே.

All songs →