Song 198
விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானனதனதான
Lyrics
விதமி சைந்தினி தாமலர் மாலைகள்குழல ணிந்தநு ராகமு மேசொலிவிதர ணஞ்சொலி வீறுக ளேசொலியழகாக
விரிகு ரும்பைக ளாமென வீறியகனக சம்ப்ரம மேருவ தாமதிவிரக மொங்கிய மாமுலை யாலெதிரமர்நாடி
இதமி சைந்தன மாமென வேயினநடைந டந்தனர் வீதியி லேவரஎவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண்வலையாலே
எனது சிந்தையும் வாடிவி டாவகைஅருள்பு ரிந்தழ காகிய தாமரைஇருப தங்களி னாலெனை யாள்வதுமொருநாளே
மதமி சைந்தெதி ரேபொரு சூரனையுடலி ரண்டுகு றாய்விழ வேசினவடிவு தங்கிய வேலினை யேவியஅதிதீரா
மதுர இன்சொலி மாதுமை நாரணிகவுரி யம்பிகை யாமளை பார்வதிமவுந சுந்தரி காரணி யோகினிசிறுவோனே
பதமி சைந்தெழு லோகமு மேவலம்நொடியில் வந்திடு மாமயில் மீதொருபவனி வந்தக்ரு பாகர சேவகவிறல்வீரா
பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்வடிவு கொண்டருள் காசியின் மீறியபழநி யங்கிரி மீதினில் மேவியபெருமாளே.
