Song 197
வார ணந்தனை நேரான மாமுலை
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதனதான
Lyrics
வார ணந்தனை நேரான மாமுலைமீத ணிந்திடு பூணார மாரொளிவால சந்திர னேராக மாமுகமெழில்கூர
வார ணங்கிடு சேலான நீள்விழியோலை தங்கிய வார்காது வாவிடவான இன்சுதை மோலான வாயிதழமுதூறத்
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடைமீதில் நின்றிடை நூல்போலு லாவியெதோகை யென்றிட வாகாக வூரனநடைமானார்
தோத கந்தனை மாமாயை யேவடிவாக நின்றதெ னாஆய வோர்வதுதோணி டும்படி நாயேனுள் நீயருள்தருவாயே
கார ணந்தனை யோராநி சாசரர்தாம டங்கலு மீறாக வானவர்காவ லிந்திர னாடாள வேயயில்விடும்வீரா
கார்வி டந்தனை யூணாக வானவர்வாழ்த ரும்படி மேனாளி லேமிசைகாள கண்டம காதேவ னார்தருமுருகோனே
ஆர ணன்றனை வாதாடி யோருரைஓது கின்றென வாராதெ னாவவனாண வங்கெட வேகாவ லாமதிவிடும்வேலா
ஆத வன்கதி ரோவாது லாவியகோபு ரங்கிளர் மாமாது மேவியஆவி னன்குடி யோனேசு ராதிபர்பெருமாளே.
