Song 190
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனனதனதான
Lyrics
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவுமுறுவல்தர விரகமெழஅநுராகம்
முதிரவச மறவிதரி யெழுவகைவளை கலகலெனமுகநிலவு குறுவெயர்வுதுளிவீச
அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிகஅகமகிழ இருகயல்கள்குழையேற
அமளிபடு மமளிமல ரணையின் மிசை துயிலுகினும்அலர்கமல மலரடியைமறவேனே
நிருதனொடு வருபுரியு மடுகரியும் ரதநிரையும்நெறுநெறன முறியவிடும்வடிவேலா
நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமரநெடியநெடு ககனமுகடுறைவோனே
வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதறமதுவினிரை பெருகுவளிமலைமீதே
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமுமருவிமகிழ் பழநிவருபெருமாளே.
