Song 191
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
முருகு செறிகுழல் முகிலென நகில்நறுமுளரி முகையென இயலென மயிலெனமுறுவல் தளவென நடைமட வனமெனஇருபார்வை
முளரி மடலென இடைதுடி யதுவெனஅதர மிலவென அடியிணை மலரெனமொழியு மமுதென முகமெழில் மதியெனமடமாதர்
உருவ மினையன எனவரு முருவகவுரைசெய் தவர்தரு கலவியி னிலவியவுலையின் மெழுகென வுருகிய கசடனையொழியாமல்
உவகை தருகலை பலவுணர் பிறவியினுவரி தனிலுறு மவலனை யசடனைஉனது பரிபுர கழலிணை பெறஅருள்புரிவாயே
அரவ மலிகடல் விடமமு துடனெழஅரிய யனுநரை யிபன்முத லனைவரும்அபய மிகவென அதையயி லிமையவனருள்பாலா
அமர்செய் நிசிசர ருடலவை துணிபடஅவனி யிடிபட அலைகடல் பொடிபடஅமரர் சிறைவிட அடலயில் நொடியினில்விடுவோனே
பரவு புனமிசை யுறைதரு குறமகள்பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுயபணில சரவணை தனில்முள ரியின்வருமுருகோனே
பரம குருபர எனுமுரை பரசொடுபரவி யடியவர் துதிசெய மதிதவழ்பழநி மலைதனி லினிதுறை யமரர்கள்பெருமாளே.
