Song 189
மூல மந்திர மோத லிங்கிலை
- Sthalam
- பழநி
- Raagam
- சுப பந்துவராளி
- Thalam
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2தான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதனதான
Lyrics
மூல மந்திர மோத லிங்கிலையீவ திங்கிலை நேய மிங்கிலைமோன மிங்கிலை ஞான மிங்கிலைமடவார்கள்
மோக முண்டதி தாக முண்டபசார முண்டப ராத முண்டிடுமூக னென்றொரு பேரு முண்டருள்பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்வார்மை யும்பல வாகி வெந்தெழுகோர கும்பியி லேவி ழுந்திடநினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடுஞான நெஞ்சினர் பாலி ணங்கிடுகூர்மை தந்தினி யாள வந்தருள்புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவசோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடைபீதி கொண்டிட வாது கொண்டருளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிடமாற னும்பிணி தீர வஞ்சகர்பீறு வெங்கழு வேற வேன்றிடுமுருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்பாக மொன்றிய வாலை யந்தரிஆதி யந்தமு மான சங்கரிகுமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவசேவ லங்கொடி யான பைங்கரஆவி னன்குடி வாழ்வு கொண்டருள்பெருமாளே.
