Song 178
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனா தனதன தந்த தானனதனதனா தனதன தந்த தானனதனதனா தனதன தந்த தானனதனதான
Lyrics
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெவடிவமார் புளகித கும்ப மாமுலைபெருகியே யொளிசெறி தங்க வாரமுமணியான
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவைஅயிலதோ வெனுமிரு கண்க ளாரவெபிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெவருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களைமனையிலே வினவியெ கொண்டு போகியயுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள்மயலாலே
உருகியே யுடலற வெம்பி வாடியெவினையிலே மறுகியெ நொந்த பாதகனுனதுதாள் தொழுதிட இன்ப ஞானமதருள்வாயே
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெகொடியதோ ரசுரர்க ளங்க மாளவெஅடலதோ டமரர்புரி கின்ற கூரியவடிவேலா
அரகரா வெனமிக அன்பர் சூழவெகடியதோர் மயில்மிசை யன்றை யேறியெஅவனியோர் நொடிவரு கின்ற காரணமுருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெஉறியதோய் தயிர்தனை யுண்டு நாடியேபசியதோ கெடவருள் கொண்ட மாயவன்மருகோனே
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெவனசமா மலரினில் வண்டு லாவவெபழநிமா மலைதனி லென்று மேவியபெருமாளே.
