Song 177
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத்தனதான
Lyrics
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்பொருமிக் கலசத்திணையாய
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்புணரத் தலையிட்டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்கறிவிற் பதடிக்கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்றடிமைக் கொருசொற்புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்குணமெய்க் களிறுக்கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்குறுகித் தகரப்பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்பழமுற் றொழுகப்புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்பழநிக் குமரப்பெருமாளே.
