Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 176

புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்

Thalam
ஆதி - 2 களை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனதன தனதன தந்தத்தனனத் தனதன தனதன தந்தத்தனனத் தனதன தனதன தந்தத்தனதான

Lyrics

புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்புநிதச் சததள நிலைகொள்ச யம்புச்சதுர்வேதன்

புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்புதகர்த் தரகர பரசிவ னிந்தத்தன஧முவ

ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்செவியுட் பிரணவ ரகசிய மன்புற்றிடவுற் பனமொழி யுரைசெய் குழந்தைக்குருநாதா

எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக்கிரியாவும்

பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத்தமுமாகப்

பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக்குமரேசா

படியிற் பெருமித தகவுயர் செம்பொற்கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற்பதனாலே

பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப்பெருமாளே.

All songs →