Song 173
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தனதனனத்தன தான தந்தனதனதான
Lyrics
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடுபயிலப்பல காவி யங்களையுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்பசலைத்தன மேபெ றும்படிவிரகாலே
சகரக்கடல் சூழ மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்சருகொத்துள மேய யர்ந்துடல்மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரிதனிலற்புத மாக வந்தருள்புரிவாயே
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடுநுவல்மெய்ப்புள பால னென்றிடுமிளையோனே
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திடநொடியிற்பரி வாக வந்தவன்மருகோனே
அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்அரனுக்கினி தாமொ ழிந்திடுகுருநாதா
அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடிஅதனிற்குடி யாயி ருந்தருள்பெருமாளே.
