Song 174
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1தந்த தானனந் தானதன தானதனதந்த தானனந் தானதன தானதனதந்த தானனந் தானதன தானதனதனதான
Lyrics
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகுவஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதிபண்கொ ளாதவன் பாவகட லுடுநுழைபவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழபெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறைபஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகுசதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்தங்கள் வாணிபங் காரியம லாமலருளன்பர் பாலுடன் கூடியறி யாதபுகழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளிசந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடிகந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள்புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவடுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடுவண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடிமுருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிடதங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்மங்க ளாயிசந் தானசிவ காமியுமையருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடைபெண்கள் நாயகந் தோகைமயில் போலிரசகொங்கை மால்குறம் பாவையவல் தீரவரஅணைவோனே
கொண்டல் சூழமஞ் சோலைமலர் வாவிகயல்கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமரபெருமாளே.
