Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 172

நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்தன தத்தன தனத்த தானனதத்தன தத்தன தனத்த தானனதத்தன தத்தன தனத்த தானனதனதான

Lyrics

நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிருகுத்துமு லைக்குட மசைத்து வீதியினிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர்மொழியாலே

நித்தம யக்கிகள் மணத்த பூமலர்மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுடனெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியுமுறவாடி

உற்றவ கைப்படி பொருட்கள் யாவையுமெத்தவு நட்பொடு பறித்து நாடொறுமுற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்களுறவாமே

உச்சித மெய்ப்புற அனைத்து யாவுடன்மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெறவுட்குளிர் புத்தியை யெனக்கு நீதரவருவாயே

கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொருகற்பனை நெற்பல அளித்த காரணனருள்பாலா

கற்பந கர்க்களி றளித்த மாதணைபொற்புய மைப்புயல் நிறத்த வானவர்கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகரஎனநாளும்

நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபரவஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தருமருகோனே

நட்டுவர் மத்தள முழக்க மாமெனமைக்குல மெத்தவு முழக்க மேதருநற்பழ நிப்பதி செழிக்க மேவியபெருமாளே.

All songs →