Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 164

தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத்தனதான

Lyrics

தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்தநுமுட் டவளைப்பவனாலே

தரளத் திரளிற் புரளக் கரளத்தமரத் திமிரக்கடலாலே

உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்கொளிமட் குமிகைப்பொழுதாலே

உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்குனநற் பிணையற்றரவேணும்

திகைபத் துமுகக் கமலத் தனைமுற்சிறையிட் டபகைத்திறல்வீரா

திகழ்கற் பகமிட் டவனக் கனகத்திருவுக் குருகிக்குழைமார்பா

பகலக் கிரணப் பரணச் சடிலப்பரமற் கொருசொற்பகர்வோனே

பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்பழநிக் குமரப்பெருமாளே.

All songs →