Song 163
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
- Sthalam
- பழநி
- Raagam
- பூர்வி கல்யாணி
- Thalam
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடுவதனாலே
தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர்சுரபி விரவிய வகையென நினைவுறுதவன சலதியின் முழுகியெ யிடர்படுதுயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிடஇருகை குவிசெய்து ளுருகிட வுருகியெஅரக ரெனவல னிடமுற எழிலுனதிருபாதம்
அருள அருளுடன் மருளற இருளறகிரண அயில்கொடு குருகணி கொடியொடுஅழகு பெறமர கதமயில் மிசைவரஇசைவாயே
சிகர குடையினி னிரைவர இசைதெரிசதுரன் விதுரனில் வருபவ னளையதுதிருடி யடிபடு சிறியவ னெடியவன்மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு வுடையவனெழிலி வடிவின னரவுபொன் முடிமிசைதிமித திமிதிமி யெனநட மிடுமரிமருகோனே
பகர புகர்முக மதகரி யுழைதருவனிதை வெருவமுன் வரஅருள் புரிகுகபரம குருபர இமகிரி தருமயில்புதல்வோனே
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகியநறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்பழநி மலைவரு புரவல அமரர்கள்பெருமாளே.
