Song 165
தமரு மமரு மனையு மினிய
- Sthalam
- பழநி
- Raagam
- ஹமீர் கல்யாணி
- Thalam
- ஆதி (12)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனன தனன தனனதனன தனனதனதான
Lyrics
தமரு மமரு மனையு மினியதனமு மரசும்அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறுதலையை வளையஎறியாதே
கமல விமல மரக தமணிகனக மருவுமிருபாதங்
கருத அருளி யெனது தனிமைகழிய அறிவுதரவேணும்
குமர சமர முருக பரமகுலவு பழநிமலையோனே
கொடிய பகடு முடிய முடுகுகுறவர் சிறுமிமணவாளா
அமர ரிடரு மவுண ருடலுமழிய அமர்செய்தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலுமழகு முடையபெருமாளே.
