Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 160

சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ

Thalam
சதுஸ்ர த்ருவம்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

( எடுப்பு /4/4/40 ), கண்டநடை (35)தனதனன தானந்த தத்ததன தானதனதனதனன தானந்த தத்ததன தானதனதனதனன தானந்த தத்ததன தானதனதனதான

Lyrics

சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவசமயவடி வாய்வந்த அத்துவித மானபரசுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுதலொருவாழ்வே

துரியநிலை யேகண்ட முத்தரித யாகமலமதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுகசுயபடிக மாவின்ப பத்மபத மேஅடையஉணராதே

கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளிபொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலைகருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல்வினைதானே

கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜமெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதிகருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉனதருள்தாராய்

ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடிமுடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயிருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅமருளவோனே

உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுகமுதவுமம லாநந்த சத்திகர மேவுணரவுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவருகுருநாதா

பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரமதசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகனபதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொருதிறலோனே

பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர்பெருமாளே.

All songs →