Song 159
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தனதனன தான தனதனனதான தனதனனதனதான
Lyrics
சீற லசடன்வினை காரன் முறைமையிலிதீமை புரிகபடிபவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமைசீர்மை சிறிதுமிலிஎவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுளகோள னறிவிலியுனடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடுகூடும் வகைமையருள்புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருதுவாகை யுளமவுலிபுனைவோனே
மாக முகடதிர வீ சு சிறைமயிலைவாசி யெனவுடையமுருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதயமேவு மொருபெருமையுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநிவேல இமையவர்கள்பெருமாளே.
