Song 161
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்ததனதான
Lyrics
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்துசுரதக்ரியை யால்வி ளங்குமதனுலே
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்குதொழிலுடைய யானு மிங்குனடியார்போல்
அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்துஅறிவையறி வால றிந்துநிறைவாகி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்பஅமுதையொழி யாத ருந்தஅருள்வாயே
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்துபரிதகழை யாமுன் வந்துபரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்றபடைஞரொடி ராவ ணன்றனுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்டரகுபதியி ராம சந்த்ரன்மருகோனே
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்தஇமையவள்த னால்ம கிழ்ந்தபெருமாளே.
