Song 15
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
- Sthalam
- திருப்பரங்குன்றம்
- Raagam
- ஆனந்த பைரவி
- Thalam
- ஸங்கீர்ண சாபு (4 1/2) (எடுப்பு - அதீதம்)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தக-1, திமி-1, தகிட-1 1/2, தக-1தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்தனத்தத் தந்தனந்தனதான
Lyrics
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்டமிழ்க்குத் தஞ்சமென்றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்தளர்ச்சிப் பம்பரந்தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்கலத்தைப் பஞ்சஇந்த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்கழற்குத் தொண்டுகொண்டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்புரக்கக் கஞ்சைமன்பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்பரத்தைக் கொண்டிடுந்தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்குலத்திற் கங்கைதன்சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்குவித்துக் கும்பிடும்பெருமாளே.
