Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 16

பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்தனதான

Lyrics

பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந்தனபாரம்

படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென்றிளைஞோர்கள்

துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும்கொடியார்பால்

துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென்றருள்வாயே

குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங்கதிர்வேலா

குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங்குகுகூகூ

திதித்திதிந் திந்தித் தித்தியெ னக்கொம்பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங்கொலைவேடர்

தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும்பெருமாளே.

All songs →