Song 14
சருவும்படி வந்தனன் இங்கித
- Sthalam
- திருப்பரங்குன்றம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தனதனதான
Lyrics
சருவும்படி வந்தனன் இங்கிதமதனின்றிட அம்புலி யுஞ்சுடுதழல்கொண்டிட மங்கையர் கண்களின்வசமாகிச்
சயிலங்கொளு மன்றல்பொ ருந்தியபொழிலின்பயில் தென்றலும் ஒன்றியதடவஞ்சுனை துன்றியெ ழுந்திடதிறமாவே
இரவும்பகல் அந்தியு நின்றிடுகுயில்வந்திசை தெந்தன என்றிடஇருகண்கள்து யின்றிட லின்றியும்அயர்வாகி
இவணெஞ்சுப தன்பதன் என்றிடமயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்இனியுன் றன்ம லர்ந்தில கும்பதம்அடைவேனோ
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்மனையின்தயிர் உண்டவன் எண்டிசைதிகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ்பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனைபவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள்முருகோனே
மதியுங்கதி ரும்புய லுந்தினமறுகும்படி அண்டம் இலங்கிடவளர்கின்றப ரங்கிரி வந்தருள்பெருமாளே.
