Song 148
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகளுலவ
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனன தனன தனன தனன தனனதனன தனனதனதான
Lyrics
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகளுலவகொலைகள் செயவெகளவோடே
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்குமுற வளையினொலிமீற
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்இடையு மசையமயில்போல
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்இடரில் மயலில்உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்விஜய கிரிசொல்அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணிவிபின கெமனியருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகரபடிவ வடிவமுடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவபழநி மருவுபெருமாளே.
