Song 147
குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனன தனதனதனன தனதனதனதான
Lyrics
குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்குமுத வதரமுறுவலாரம்
குழைம கரம்வளை மொழிகு யிலமுதுகுயமு ளரிமுகைகிரிசூது
விழிக யலயில்ப கழிவ ருணிகருவிளைகு வளைவிடமெனநாயேன்
மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலிவெறிது ளம்விதனமுறலாமோ
கழல்ப ணியவினை கழல்ப ணியையணிகழல்ப ணியவருள்மயில்வீரா
கமலை திருமரு கமலை நிருதருகமலை தொளைசெய்தகதிர்வேலா
பழனி மலைவரு பழநி மலைதருபழநி மலைமுருகவிசாகா
பரவு பரவைகொல் பரவை வணஅரிபரவு மிமையவர்பெருமாளே.
