Song 146
குருதி மலசல மொழுகு நரகுட
- Sthalam
- பழநி
- Raagam
- கேதார கெளளை
- Thalam
- மிஸ்ர சாபு (3 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2தனன தனதன தனன தனதனதனன தனதன தனன தனதனதனன தனதன தனன தனதனதனதான
Lyrics
குருதி மலசல மொழுகு நரகுடலரிய புழுவது நெளியு முடல்மதகுருபி நிணசதை விளையு முளைசளியுடலுடே
குடிக ளெனபல குடிகை வலிகொடிகுமர வலிதலை வயிறு வலியெனகொடுமை யெனபிணி கலக மிடுமிதையடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகிதமணிய சலபல கவடி மலர்புனைமதன கலைகொடு குவடு மலைதனில்மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிடமதன பிணியொடு கலைகள் சிதறிடமனது பதமுற வெனது தலைபதமருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெறநிசித அரவளை முடிகள் சிதறிடநெரிய கிரிகட லெரிய வுருவியகதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்நிருப குருபர குமர சரணெனநெடிய முகிலுடல் கிழிய வருபரிமயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிடமருவு மொருமலை யரையர் திருமகள்படிவ முகிலென அரியி னிளையவளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரிவடிவு கொடுவர விரவு குறமகளபய மெனவணை பழநி மருவியபெருமாளே.
