Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 145

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு

Thalam
ஆதி - 2 களை (16)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனந்த தனதன தனதன தனதனதனந்த தனதன தனதன தனதனதனந்த தனதன தனதன தனதனதனதான

Lyrics

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடுஎலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதிகுலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபலகசுமாலக்

குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணைவிறலான

சரம்ப ருறவனை நரகனை துரகனைஇரங்கு கலியனை பரிவுறு சடலனைசவுந்த ரிகமுக சரவண பதமொடுமயிலேறித்

தழைந்த சிவசுடர் தனையென மனதினில்அழுந்த வுரைசெய வருமுக நகையொளிதழைந்த நயனமு மிருமலர் சரணமுமறவேனே

இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழிலுறைந்த குயிலளி யொலிபர விடமயிலிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர்வளநாடா

இருண்ட குவடிடி பொடிபட வெகுமுகடெரிந்து மகரமொ டிசைகரி குமுறுகஇரைந்த அசுரரொ டிபபரி யமபுரம்விடும்வேளே

சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்அரம்பை மகளிரொ டரகர சிவசிவசெயம்பு வெனநட மிடுபத மழகியர்குருநாதா

செழும்ப வளவொளி நகைமுக மதிநகுசிறந்த குறமக ளிணைமுலை புதைபடசெயங்கொ டணைகுக சிவமலை மருவிய பெருமாளே.

All songs →