Song 144
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தந்ததனத் தான தந்ததனத்தான தந்ததனத்தனதான
Lyrics
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்காதல் நெஞ்சயரத்தடுமாறிக்
கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்காய மொன்றுபொறுத்தடியேனும்
தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்சாப மொன்றுநுதற்கொடியார்தம்
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்தாழ்வ டைந்துலையத்தகுமோதான்
சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்தோய முஞ்சுவறப்பொரும்வேலா
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்சூழ்பெ ருங்கிரியிற்றிரிவோனே
ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்றால முண்டவருக்குரியோனே
ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்றாவி னன்குடியிற்பெருமாளே.
