Song 143
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனா தனந்தனத் தனனா தனந்தனத்தனனா தனந்தனத்தனதான
Lyrics
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்புரமா ரணந்துளுத்திடுமானார்
கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்பொருளே யிழந்துவிட்டயர்வாயே
மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்டறவே யுலந்துசுக்கதுபோலே
வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்பெனவே நினைந்துனைப்புகழ்வேனோ
புனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப்புணர்காதல் கொண்டஅக்கிழவோனே
புனலேழு மங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்டெழவே லெறிந்தவுக்கிரவீரா
தினமேவு குங்குமப் புயவாச கிண்கிணிச்சிறுகீத செம்பதத்தருளாளா
சிவலோக சங்கரிக் கிறைபால பைங்கயத்திருவா வினன்குடிப்பெருமாளே.
