Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 142

கனத்திறுகிப் பெருத்திளகிப்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனதான

Lyrics

கனத்திறுகிப் பெருத்திளகிப்பணைத்துமணத் திதத்துமுகக்கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த்தலமேராய்

கவட்டையுமெத் தடக்கிமதர்த்தறக்கெருவித் திதத்திடுநற்கலைச்சவுளித் தலைக்குலவிக்களிகூருந்

தனத்தியர்கட் கிதத்துமிகுத்தனற்குண்மெழுக் கெனப்புவியிற்றவித்திழிசொற் பவக்கடலுற்றயர்வாலே

சலித்தவெறித் துடக்குமனத்திடக்கனெனச் சிரிக்கமயற்சலத்தின்வசைக் கிணக்கமுறக்கடவேனோ

புனத்தின்மலைக் குறத்தியுயர்த்திருக்குதனக் குடத்தினறைப்புயத்தவநற் கருத்தையுடைக்குகவீரா

பொருப்பரசற் கிரக்கமொடுற்றறற்சடிலத் தவச்சிவனிற்புலச்சிதனக் கிதத்தைமிகுத்திடுநாதா

சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்திகைத்துவிழக் கணப்பொழுதிற்சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத்துடையோனே

செருக்கொடுநற் றவக்கமலத்தயற்குமரிக் கருட்புரிசைத்திருப்பழநிக் கிரிக்குமரப்பெருமாளே.

All songs →