Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 141

கனக கும்பமி ரண்டு நேர்மலை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானனதந்ததான

Lyrics

கனக கும்பமி ரண்டு நேர்மலையெனநெ ருங்குகு ரும்பை மாமணிகதிர்சி றந்தவ டங்கு லாவியமுந்துசூதம்

கடையில் நின்றுப ரந்து நாடொறுமிளகி விஞ்சியெ ழுந்த கோமளகளப குங்கும கொங்கை யானையையின்பமாக

அனைவ ருங்கொளு மென்று மேவிலையிடும டந்தையர் தங்கள் தோதகமதின்ம ருண்டு துவண்ட வாசையில்நைந்துபாயல்

அவச மன்கொளு மின்ப சாகரமுழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழிதருப தங்கதி யெம்பி ரானருள்தந்திடாயோ

தனத னந்தன தந்த னாவெனடிகுகு டிங்குகு டிங்கு பேரிகைதகுதி திந்திகு திந்த தோவெனவுந்துதாளந்

தமர சஞ்சலி சஞ்ச லாவெனமுழவு டுண்டுடு டுண்டு டூவெனதருண கிண்கிணி கிண்கி ணாரமுமுந்தவோதும்

பணிப தங்கய மெண்டி சாமுககரிய டங்கலு மண்ட கோளகைபதறி நின்றிட நின்று தோதகஎன்றுதோகை

பவுரி கொண்டிட மண்டி யேவருநிசிச ரன்கிளை கொன்ற வேலவபழநி யங்கிரி யின்கண் மேவியதம்பிரானே.

All songs →