Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 140

கறுத்த குழலணி மலரணி பொங்கப்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்த தனதன தனதன தந்தத்தனத்த தனதன தனதன தந்தத்தனத்த தனதன தனதன தந்தத்தனதான

Lyrics

கறுத்த குழலணி மலரணி பொங்கப்பதித்த சிலைநுத லணிதில தம்பொற்கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச்சிரமான

கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்குவட்டு முலையசை படஇடை யண்பைக்கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக்கொடிபோலச்

சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்டிருக்கு நடைபழ கிகள்கள் பங்கச்சுடைமாதர்

திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்குவட்டி யவர்வலை யழலுறு பங்கத்திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத்தவிர்வேனோ

பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்படித்த மதியற லரவணி சம்புக்குருநாதா

பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்கொதித்த அலைகட லெரிபட செம்பொற்படைக்கை மணியயில் விடுநட னங்கொட்கதிர்வேலா

தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்சிறப்பு மயில்மிசை பவரிகொ ளும்பொற்றிருபாதா

சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப்பெருமாளே.

All songs →