Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 149

குறித்தமணிப் பணித்துகிலைத்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனதான

Lyrics

குறித்தமணிப் பணித்துகிலைத்திருத்தியுடுத் திருட்குழலைக்குலைத்துமுடித் திலைச்சுருளைப்பிளவோடே

குதட்டியதுப் புதட்டைமடித்தயிற்பயிலிட் டழைத்துமருட்கொடுத்துணர்வைக் கெடுத்துநகக்குறியாலே

பொறித்ததனத் தணைத்துமனச்செருக்கினர்கைப் பொருட்கவரப்புணர்ச்சிதனிற் பிணிப்படுவித்திடுமாதர்

புலத்தலையிற் செலுத்துமனப்ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்புரித்தருளித் திருக்கழலைத்தருவாயே

பறித்ததலைத் திருட்டமணக்குருக்களசட் டுருக்களிடைப்பழுக்களுகக் கழுக்கள்புகத்திருநீறு

பரப்பியதத் திருப்பதிபுக்கனற்புனலிற் கனத்தசொலைப்பதித்தெழுதிப் புகட்டதிறற்கவிராசா

செறித்தசடைச் சசித்தரியத்தகப்பன்மதித் துகப்பனெனச்சிறக்கவெழுத் தருட்கருணைப்பெருவாழ்வே

திகழ்படுசெய்ப் பதிக்குளெனைத்தடுத்தடிமைப் படுத்தஅருட்டிருப்பழநிக் கிரிக்குமரப்பெருமாளே.

All songs →