Song 135
கலக வாள்விழி வேலோ சேலோ
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தானன தானா தானாதனன தானன தானா தானாதனன தானன தானா தானாதனதான
Lyrics
கலக வாள்விழி வேலோ சேலோமதுர வாய்மொழி தேனோ பாலோகரிய வார்குழல் காரோ கானோதுவரோவாய்
களமு நீள்கமு கோதோள் வேயோஉதர மானது மாலேர் பாயோகளப வார்முலை மேரோ கோடோஇடைதானும்
இழைய தோமலர் வேதா வானோனெழுதி னானிலை யோவாய் பேசீரிதென மோனமி னாரே பாணரெனமாதர்
இருகண் மாயையி ல்முழ் காதேயுனது காவிய நூலா ராய்வேனிடர்ப டாதருள் வாழ்வே நீயேதரவேணும்
அலைவி லாதுயர் வானோ ரானோர்நிலைமை யேகுறி வேலா சீலாஅடியர் பாலரு ளீவாய் நீபார்மணிமார்பா
அழகு லாவுவி சாகா வாகாரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வாரயலு லாவிய சீலா கோலாகலவீரா
வலபை கேள்வர்பி னானாய் கானார்குறவர் மாதும னாளா நாளார்வனச மேல்வரு தேவா மூவாமயில்வாழ்வே
மதுர ஞானவி நோதா நாதாபழநி மேவுகு மாரா தீராமயுர வாகன தேவா வானோர்பெருமாளே.
