Song 134
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2(எடுப்பு - 1/2 தள்ளி)தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்ததனதான
Lyrics
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்துகலைகள்பல வேதெ ரிந்துமதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்துகவலைபெரி தாகி நொந்துமிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்றுஅறுசமய நீதி யொன்றுமறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்றுஅநுதினமு நாண மின்றியழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்உலகளவு மால்ம கிழ்ந்தமருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்கஉறைபுகலி யூரி லன்றுவருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்றபரமனரு ளால்வ ளர்ந்தகுமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்றுபழநிமலை மீதில் நின்றபெருமாளே.
