Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 136

கலகக் கயல்விழி போர்செய வேள்படை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனதன தானன தானனதனனத் தனதன தானன தானனதனனத் தனதன தானன தானனதனதான

Lyrics

கலகக் கயல்விழி போர்செய வேள்படைநடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்கனியக் கனியவு மேமொழி பேசியவிலைமாதர்

கலவித் தொழினல மேயினி தாமெனமனமிப் படிதின மேயுழ லாவகைகருளைப் படியெனை யாளவு மேயருள்தரவேணும்

இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகிகுழையத் தழுவிய மேன்முயி னாலுயர்இசைபெற் றருளிய காமுக னாகியவடிவோனே

இதமிக் கருமறை வேதிய ரானவர்புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்இசையத் தருமநு கூலவ சீகரமுதல்வோனே

நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்செவியிற் பிரணவ மோதிய தேசிகநிருதர்க் கொருபகை யாளியு மாகியசுடர்வேலா

நிமலக் குருபர ஆறிரு பார்வையும்அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்நிகரற் றவரென வேமகிழ் கூர்தருமுரியோனே

பலவிற் கனிபணை மீறிய மாமரமுருகிற் கனியுட னேநெடு வாளைகள்பரவித் தனியுதிர் சோலைகள் மேவியவகையாலே

பழனத் துழவர்க ளேரிட வேவிளைகழனிப் புரவுகள் போதவு மீறியபழநிச் சிவகிரி மீதினி லேவளர்பெருமாளே.

All songs →