Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1321

தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதி(எடுப்பு - 1/2 இடம்)தனதன தத்தத் தனதன தத்தத்தனதன தத்தத் தனதன தத்தத்தனதன தத்தத் தனதன தத்தத்தனதானா

Lyrics

தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்கலகலெ னப்பற் கட்டது விட்டுத்தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத்தடுமாறித்

தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்சளியுமி குத்துப் பித்தமு முற்றிப்பலகாலும்

திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட்டுயிர்போமுன்

திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்செனனம றுக்கைக் குப்பர முத்திக்கருள்தாராய்

கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்கடகுந டத்தித் திட்டென எட்டிப்பொருசூரன்

கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப்பொருகோவே

குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற்றிரிவோனே

கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்குலகிரியிற்புக் குற்றுரை யுக்ரப்பெருமாளே.

All songs →